International
பிரான்ஸ்

அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்ட நபர் பலி! – காவல்துறையினரை தாக்க முயற்சி!!

ப்பது வயதுகளையுடைய நபர் ஒருவர் அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டுக்கொண்டு காவல்துறை அதிகாரிகளை தாக்க முற்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை, ‘விசித்திரமான நடவடிக்கைகள்’ என காவல்துறையினரால் குறிப்பிடப்பட்ட நபர் ஒருவர் Vic-sur-Aisne (Aisne) பகுதியில் உயிரிழந்துள்ளார். 30 வயதுடைய குறித்த நபர் அல்லா – ஹூ – அக்பர் என கோஷமிட்டுக்கொண்டு காவல்துறை அதிகாரிகளை இரும்பு கம்பி ஒன்றை கொண்டு தாக்க முற்பட்டுள்ளார். மின்சார துப்பாக்கியால் காவல்துறையினர் குறித்த நபரை தாக்க, அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் Vic-sur-Aisne பகுதியில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள்ளாக அவர் காவக்துறையினரை தாக்க முற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மாரடைப்பினால் தான் குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என இன்று செவ்வாய்க்கிழமை காலை பிரேத பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இரண்டு வெவ்வேறு தரப்பட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!