International
பிரான்ஸ்

அவதானம்!! – இன்று முதல் இல்-து-பிரான்சுக்குள் 60% வாகனங்களுக்கு தடை!!

அதிக சுற்றுச்சூழல் மாசடைவு காரணமாக இன்று புதன்கிழமை இல்-து-பிரான்சுக்குள் 60 வீத வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாரத்தில் மிக அதிகமான வெப்பம் நிலவுவதால், இல்-து-பிரான்சுக்குள் வாகனம் ஓட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, Crit’Air ஒட்டிகளில், வகை 5, 4 மற்றும் 3 ஆகிய இலக்கங்களை கொண்ட வாகனக்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இல்-து-பிரான்சுக்குள் பதிவு செய்யப்பட்ட 8 மில்லியன் வாகனங்களில் 4.7 மில்லியன் வாகனங்களுக்கு இன்று தடை விதிக்கப்படுள்ளது. பரிசுக்குள் பதிவான 531,406 வாகனங்களில் 57% வீதமான வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகளவில் பாதிக்கப்படும் மாவட்டமாக சென்-செந்தனி மாவட்டம் உள்ளது. இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள 681,800 வாகனங்களில் 70 வீதமான வாகனங்கள் பாதிக்கப்பட உள்ளது. 

மொத்தமாக இல்-து-பிரான்சுக்குள் 59.15% வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!