International
பிரான்ஸ்

அவதானம்! – இல்-து-பிரான்சுக்குள் புதிய காய்ச்சல்! – இதுவரை 3,655 பேர் பாதிப்பு! – ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி!!

பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவிவரும் புதிய வகை காய்ச்சல் ஒன்றினால் இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார ஆணைக்குழு (Agence Régionale de Santé) இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. இல்-து-பிரான்சுக்குள் ஒவ்வொரு 100,000 பேரில் 499 பேர் இந்த காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தில் ஒவ்வொரு 100,000 பேருக்கும் 413 பேராக மாத்திரமே இருந்தது. கடந்த ஜனவரி 28 ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 3 ஆம் திகதிக்குள் 3,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த எண்ணிக்கை 3,655 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மிக அதிர்ச்சியளிக்கும் விதமாக, இதுவரை இந்த புதிய காய்ச்சலினால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்வேறு அவசரகால சுகாதார மையங்கள் இல்-து-பிரான்ஸ் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!