International
பிரான்ஸ்

அவதானம் – ஓல்னே-சூ-பூவா தொடக்கம் சாள்-து-கோல் வரையான RER B சேவை தடை!!

நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஓல்னே-சூ-பூவாவில் இருந்து சாள்-து-கோல் வரை பயணிக்கும் RER B சேவை திருத்தப்பணிகள் காரணமாக தடைப்பட உள்ளன.

RATP இத்தகவலை அறிவித்துள்ளது. தொடரூந்து தண்டவாளத்தின் கம்பிகளை மாற்றீடு செய்யும் திருத்தப்பணிகள் இடம்பெற உள்ளதாக் வார இறுதி இரு நாட்களும் RER B சேவைகள் குறித்த இரு நகரங்களுக்கிடையே முற்றாக தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இவற்றுக்கு மாற்றீடாக சிறப்பு பேரூந்துக்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சனிக்கிழமை காலை 5.30 மணியில் இருந்து சேவைகள் தடைப்படும். தவிர, ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒரு தடவை சிறப்பு பேரூந்துக்கள் இயக்கபடும் எனவும் RATP அறிவித்துள்ளது.

 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!