International
பிரான்ஸ்

இக்கோடை காலத்தில் பரிசில் புதிதாக 11 பூங்காக்கள்..!!

இக்கோடை காலத்தில் பரிசுக்குள் புதிதாக 11 பூங்காக்கள் திறக்கப்பட உள்ளதாக நகரசபை அறிவித்துள்ளது. 

இந்த பூங்காக்களில் சிலவற்றை தற்போதே பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதாகவும், இவ்வருடத்தின் கோடையில் மீதமான பூங்கா திறக்கப்படும் எனவும் கடந்த வியாழக்கிழமை நகரசபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஆறு ஹெக்டேயர்கள் பரப்பளவை வெவ்வேறு பூங்காவாக பிரித்து இவை அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆறு பூங்காவினையும் சேர்த்து மொத்தமாக 1,500 மரங்கள் நடப்பட்டு வருகின்றன. 

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிகளில், தற்போது 11 பூங்கா மாத்திரம் திறக்கப்பட உள்ளன. தவிர இந்த பணிகள் 2020 ஆம் ஆண்டுவரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் நகர துணை முதல்வர் Pénélope Komitès தெரிவிக்கும் போது, <<மேலதிகமாக 30 ஹெக்டேயர்கள் நிலப்பரப்பில் பூங்கா அமைக்கும் திட்டத்தை நோக்கி நாம் பயணித்துள்ளோம். மொத்தமான பூங்கா தவிர்த்து, சிறு குளங்கள் தாவரவியல் இடங்கள், சிறு பாசி பாறைகள் என மொத்தம் 100 ஹெக்டேயர்களை பசுமை நிலங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்!>> என குறிப்பிட்டார். 

புதிய பூங்காக்களின் பட்டியல் : 

Jardin Teilhard de Chardin (4e).

Jardin Treska Torrès-Levin (8e). Ouverture prévue fin août.

Jardin Marielle Franco (10e). Ouverture prévue mi-août.

Jardin Martha Desrumaux (12e). Ouverture prévue mi-août. 

La Promenade de la rivière des Minimes (12e). 

Jardin Jane et Paulette Nardal (14e).

Jardin de l’Impasse de la Chapelle (18e).

Forêt linéaire Nord (19e).

Parc Césaria Evora (19e).

Jardin des Petites Rigoles (20e).

Jardin Marianne (11e, 12e, 20e) place de la Nation.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!