International
பிரான்ஸ்

இன்றும் தொடரும் வெப்பம்! – 79 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

இவ்வாரத்தின் ஆரம்பத்தில் இருந்து பிரான்சை பீடித்துள்ள அதீத வெப்பம், இன்று சனிக்கிழமையும் தொடர்கிறது. 

இன்று பரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் மாவட்டங்கள் உட்பட மொத்தம் 79 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய அளவிலான வெப்பம் இல்லாமல், இன்று அதிகபட்சமாக 38°c வரை வெப்பம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தெற்கு மாவட்டங்களை வாட்டி எடுத்துச் சென்ற 45.9°c வெப்பம் ஒரு சாதனையாக இருந்தது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த Bouches-du-Rhone, Gard, Herault மற்றும் Vaucluse ஆகிய அந்த நான்கு மாவட்டங்களும் இன்று செம்மஞ்சள் எச்சரிக்கைக்கு திரும்புகின்றன. 

அதிகபட்சமாக இன்று 36°c இல் இருந்து 38°c வரை பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பரிஸ், அதன் புறநகர்கள் உட்பட இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!