International
பிரான்ஸ்

இன்று முதல் புதிய வடிவம் பெறும் மெற்றோ பயணச்சிட்டை!!

இன்று புதன்கிழமை முதல் மெற்றோ சிட்டைகள் புதிய வடிவம் பெற்றுள்ளன. புதிய வசதிகளும் சேர்க்கபட்டுள்ளன. 

வழக்கமான அட்டையில் அச்சடித்து விற்கப்படும் சிட்டைகளுக்கு முடிவுகட்டபட்டுள்ளது. இனிமேல் ஒரே ஒரு சிட்டையை வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம். €2க்கு வழங்கபடும் இந்த புதிய <> சிட்டையினை நீங்கள் கடைகளிலோ, மெற்றோ நிலையங்களிலோ வாங்கலாம். ஒரு தடவைக்கான அட்டை €1.90 களாகவோ, அல்லது 10 தடவைகளுக்கான அட்டை €14.90 க்கோ நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். அதன் பின்னர் நீங்கள் உங்கள் திறன்பேசி மூலம் தேவையான படி மீள் நிரப்பிக்கொள்ளலாம். ஒரு தடவையில் 30 தடவைகள் வரை மீள் நிரப்பலாம். 

இது தொடர்பாக IDF-Mobilités முதல்வர் Valérie Pécresse தெரிவிக்கும் போது,  <<மிக தாமதமான வளர்ச்சி இது. பல நாடுகளில் இந்த வசதிகள் வந்துவிட்டன. இந்த வசதி பிரித்தானியாவின் Osyter Card இல் இருந்து ஈர்க்கபட்டு இது உருவாக்கபட்டுள்ளது!’ என குறிப்பிட்டார். 

ஒவ்வொரு வருடமும் 550 மில்லியன் பயணச்சிட்டைகள் அச்சடிக்கபடுகின்றன. இந்த வசதி மூலம் இதற்கு ஒரு முடிவு காணலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை முதன் முதலாக 9 அம் வட்டாரத்தில் உள்ள Trinité-d’Estienne  நிலையத்தில் இந்த சிட்டைகளை பெற்றுக்கொள்ளலாம். தற்போது புழக்கத்தில் இருக்கும் வழமையான சிட்டைகள், வரும் 2021 ஆம் ஆண்டுக்குள் முற்றுமுழுதாக அச்சடிக்கப்படுவது நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!