International
பிரான்ஸ்

இன்று முதல் 12,000 காவல்துறை அதிகாரிகளுக்கு இலவச போக்குவரத்து!!

இன்று செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இல்-து-பிரான்சின் மாவட்டங்களில் பணி புரியும் 12,000 காவல்துறை அதிகாரிகளுக்கு இலவச போக்குவரத்து வசதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக அதிகாரிகளால் கோரப்பட்டு வந்த இந்த வசதி, இறுதியாக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பரிசில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் 30,000 பேருக்கு இலவச போக்குவரத்து வழங்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து Ile de France Mobilité (இல்-து-பிரான்சுக்கான பொது போக்குவரத்து) கடந்த ஜூலை 11 ஆம் திகதி வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டதன் பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்துக்கான நவிகோ அட்டையினை இவர்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என Ile de France Mobilité இன் தலைவர் Valérie Pécresse அறிவித்துள்ளார். இதற்காக போக்குவரத்து துறை 2 மில்லியன் யூரோக்களை வருடத்துக்கு மேலதிகமாக ஒதுக்குகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!