International
பிரான்ஸ்

இரண்டு மில்லியன் யூரோக்கள் பறிமுதல்! – ஜனநாயகம் மீதான படுகொலை என்கிறார் மரீன் லூ பென்!!

மரீன் லூ பென்னின் Le Rassemblement national கட்சிக்கு இரண்டு மில்லியன் யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்படுவதாக நீதிமன்றத்தால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அக்கட்சியினர் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

‘கற்பனையான வேலைவாய்ப்பு’ வழங்கியதாக மரீன் லூ பென் கட்சியின் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 2 மில்லியன் யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. வங்கிகளில் குறித்த கட்சிக்கோ அல்லது மரீன் லூ பென்னுக்கோ நிதி உதவி வழங்கமுடியாது என வங்கிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, பொது மக்களிடம் இப்பணத்தினை சேகரிக்க முற்பட்டுள்ளனர். இதற்கான கோரிக்கையை இணையத்தளம் மூலம் மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் பல வங்கிகள் Le Rassemblement national கட்சியின் பல கணக்குகளை முடக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தவிர, இன்று காலை செய்தி தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்ட மரீன் லூ பென், ‘இது ஜனநாயத்துக்கு மேல் நடத்தப்பட்ட படுகொலை!’ என தெரிவித்தார். தற்போது இரண்டு மில்லியன் யூரோக்கள் பணத்தினை நீதிமன்றத்துக்கு கட்டுவதற்காக நன்கொடைகள் கோரப்பட்டுள்ளன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!