International
பிரான்ஸ்

இராக்கில் எட்டாவது பிரெஞ்சு பயங்கரவாதிக்கு மரண தண்டனை!!

கடந்த இரண்டு வாரங்களில் ஈராக்கில் எட்டு பிரெஞ்சு பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை பாக்தாத் (Baghdad) பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் 32 வயதுடைய  Fodil Tahar Aouidate எனும் பிரெஞ்சு பயங்கரவாதிக்கு மரணந்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இவன் தேயேஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கடந்த இரண்டு வாரங்களில் வழங்கப்படும் எட்டாவது பிரெஞ்சு பயங்கரவாதி. இவர் கடந்த பெப்ரவரி மாதம் சிரியாவில் இருந்து குர்திஸ் பயங்கரவாத- தடுப்பு பிரிவினரால் (Kurdish anti-Daesh force – to Iraq) ஈராக்கிற்கு அழைத்துவரப்பட்டான். 

மனித உரிமைகள் ஆணையம் இந்த தீர்ப்பிற்கு கண்டனம் வெளியிட்டுள்ளது. பிரெஞ்சு அரசு தரப்பில் <<தொடர்ச்சியான இந்த ‘மரண தண்டனை’யை விலக்க பல வழிகள் உண்டு. நியாயமான தண்டனைகளுக்கு எவ்வித உறுதிப்பாடுகளும் இல்லை!’ என தெரிவித்துள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!