International
பிரான்ஸ்

இராட்சத திரையில் அரை இறுதி போட்டி! – கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும்…!!

இன்று செவ்வாய்க்கிழமை ஜூலை 10 ஆம் திகதி, பிரான்ஸ் – பெல்ஜியம் மோதிக்கொள்ளும் அரை அறுதி போட்டி இடம்பெற உள்ளது. இப்போட்டியினை பரிஸ் மாநகர மண்டபத்துக்கு முன்னால் இராட்சத திரை அமைக்கப்பட்டு அதில் நேரடியாக காண்பிக்கப்பட உள்ளது.

தற்போது, காவல்துறையினர் வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டி இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கின்ற போதும், 4 மணி நேரத்துக்கு முன்பாகவே ரசிகர்களை காவல்துறையினர் அழைத்துள்ளனர். அனைவரும் முற்றாக சோதனையிடப்பட்டதன் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். போட்டியினை காண வரும் ரசிகர்கள் பைகள், பொதிகள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர, மதுபானம் அருந்திவிட்டு வருபவர்கள், மதுபான போத்தல்கள், டின்கள் சிகரெட் பெட்டிகள் போன்றவையுடன் வருபவர்கள் அனைவருக்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தவிர, அப்பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரை அப்பகுதியில் வாகனங்கள் தரித்து நிற்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. (கீழே உள்ள இப்புகைப்படத்தில், சிவப்பு கோடிட்ட பகுதிகளில் வாகனம் நிறுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது)

அதேவேளை, 18.30 இல் இருந்து வீதி மூடப்பட்டு வாகங்களுக்கும், பாதசாரிகளுக்கும் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் பிரான்ஸ் அணி ஜெயிப்பதற்கு 39 வீத வாய்ப்புகளும், பெல்ஜியம் அணி ஜெயிப்பதற்கு 31 வீத வாய்ப்புகளும், போட்டி சமனில் முடிய 30 வீத வாய்ப்புகளும் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!