International
பிரான்ஸ்

இல்-து-பிரான்சுக்குள் மிக ஏழையான நகரமாக Grigny தேர்வு!!

புதிய தகவல் திரட்டு ஒன்றின் படி, இல்-து-பிரான்சுக்குள் மிக ஏழ்மையான நகரமாக Grigny நகரம் தேர்வாகியுள்ளது.

தணிக்கையாளர்களின் நீதிமன்றம் இந்த வருடாந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இல்-து-பிரான்சுக்குள் மிகவும் பொருளாதாரத்தில் பின்னடைவில் உள்ள நகரங்களில் முதலிடத்தில் Grigny நகரம் உள்ளது. இதனோடு சேர்த்து தமிழர்கள் செறிந்து வாழும் நகரங்களான Aubervilliers, Bobigny, Clichy-sous-Bois ஆகிய நகரங்களும் பலவீனமான நகரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Grigny நகரில் 45 வீதமான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து உதவித்தொகை பெறும் தனித்த அம்மாக்களும், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் இந்த நகரின் பின்னடைவுக்கு பிரதான காரணம் எனவும் தணிக்கையாளர்களின் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!