International
பிரான்ஸ்

இல்-து-பிரான்சை கடக்கும் புயல்! – நாளை காலை வரை எச்சரிக்கை!!

நேற்று சனிக்கிழமை மாலை முதல் கடும் புயல் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை வரை அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த பட்டியலில் இல்-து-பிரான்சின் மாவட்டங்கள் இடம்பெறவில்லை. இது தொடரான எமது முந்தைய செய்தி இங்கே :

பதினெட்டு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

இந்நிலையில், இல்-து-பிரான்சுக்குள்ளும் புயல்காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏனைய மாவட்டங்கள் போன்று மிக ஆபத்தான புயலாக இது இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடற்கரையில் இருந்து புறப்படும் புயல் பிரான்சை கடந்து ஐரோப்பிய கண்டத்தின் தீவுகளை சென்றடைகிறது.

இல்-து-பிரான்சுக்குள் மணிக்கு 80 கி.மீ வேகம் வரை புயல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!