International
பிரான்ஸ்

ஈஃபிள் கோபுரத்தின் பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்த மஞ்சள் மேலங்கி போராளிகள்!!

நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற பதின்மூன்றாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், ஈஃபிள் கோபுரத்தின் பாதுகாப்பு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

கடந்த சில வாரங்களாக அமைதியாக இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டம், நேற்று முன் தினம் 13 ஆவது வார ஆர்ப்பாட்டம் பெரும் வன்முறையாக வெடித்திருந்தது. பரிசுக்குள் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரியூட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், ஈஃபிள் கோபுரத்தை சுற்றி அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கண்ணாடி மதிலை மஞ்சள் மேலங்கி போராளிகள் உடைத்துள்ளனர். இந்த கண்ணாடி சுவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து அமைக்கப்படு வருகின்றது.

மொத்தமாக €35 மில்லியன் யூரோக்கள் செலவில் இந்த கண்ணாடி மதில்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் பரிசுக்குள் 45 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!