International
பிரான்ஸ்

உடம்பில் வெடிகுண்டு பொருத்தியிருப்பதாக அச்சுறுத்தல் விடுத்த நபர்! – பதினெட்டாம் வட்டாரத்தில் பரபரப்பு!!

நேற்று வியாழக்கிழமை இரவு, பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நபர் ஒருவர் தன் உடம்பில் வெடிகுண்டை மறைத்து வைத்துள்ளதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இரவு, 18 ஆம் வட்டாரத்தின் Rue des Saules இல் உள்ள La Bonne Franquette உணவகத்துக்கு நபர் ஒருவத் வித்தியாசமான ஆடை ஒன்றை அணிந்துகொண்டு வந்துள்ளார். இராணுவத்தினர் அணியும் ‘ஜக்கட்’ உடை போல் மிக புஷ்ட்டியாக தோற்றமளிக்கும் உடையுடன் உணவகத்துக்குள் நுழைந்த நபர், பணம் செலுத்தாமல் சிகரெட் ஒன்றை பெற முயற்சித்துள்ளார். ஆனால் அது நிர்வாகியால் மறுக்கப்பட, அவர் தன் உடம்பில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை பொருத்தியிருப்பதாகவும், அதை வெடிக்க வைக்கப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் விரைந்து வந்தனர். உணவகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். குறித்த நபரை ஆயுத முனையில் மடக்கி பிடித்து, கீழே படுக்கவைத்து, உடைகள் களையப்பட்டது. அவரின் உடம்பில் எவ்வித வெடிகுண்டும் பொருத்தப்படவில்லை என உறுதி செய்யப்பட்டதும், அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்த சென்றனர். அதன் பின்னர் நிலமை இயல்புக்குத் திரும்பியது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!