International
பிரான்ஸ்

உலகக்கிண்ண சாம்பியன்! – புதிய பெயர்களின் தொடரூந்து நிலையங்கள்!!

நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் இரண்டாவது தடவையாக உலகக்கிண்ணத்தை பிரெஞ்சு அணி கைப்பற்றியதைத் தொடர்ந்து, ரசிகர்களின் கொண்டாட்டம் இரவு முழுவதும் நீடித்து, தற்போதும் தொடர்ந்துகொண்டுள்ளது.

வெற்றியை கொண்டாடும் முகமாக பரிசில் உள்ள ஆறு தொடரூந்து நிலையங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை தொடரூந்து நிலையங்களுக்குள் நுழைந்த பயணிகளை இந்த பெயர் ஆச்சரியப்பட வைத்தது.

இரண்டாம் இலக்க வழி நிலையமான La station Avron நிலையத்துக்கு புதிய பெயராக, Nous Avron Gagné என சூட்டப்பட்டுள்ளது.

Charles de Gaulle நிலையத்துக்கு On a 2 Étoiles என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எழுத்தாளர் Victor Hugo பெயருடைய தொடரூந்து நிலையம் தற்போது பிரெஞ்சு உதைப்பந்தாட்ட வீரரின் பெயரையும் இணைத்துக்கொண்டு Victor Hugo Lloris என மாறியுள்ளது.

Bercy நிலையம் Bercy les Bleus என மாற்றம் கண்டுள்ளது.

Notre-Dame des Champs எனும் 12 ஆம் வழி தொடரூந்து நிலையம் தற்போது Notre Didier Deschamps எனும் பெயரில் மாற்றம் கண்டுள்ளது.

மிக சுவாரஷ்யமாக Champs-Elysées – Clémenceau நிலையத்தின் பெயரை “Deschamps Elysées – Clémenceau” என மாற்றியுள்ளார்கள்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!