International
பிரான்ஸ்

உலகின் மிக மோசமான விமான நிலையங்கள்! – பிரான்சில் இருந்து மூன்று தேர்வு!!

உலகில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் குறித்த தரவரிசை பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பிரான்சைச் சேர்ந்த மூன்று நிலையங்கள் தரவரிசையின் இறுதியில் உள்ளன. 

உலகில் உள்ள விமான நிலையங்களை பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு d’AirHelp எனும் நிறுவனம் தரப்படுத்தியுள்ளது. 132 விமான நிலையங்கள் கொண்ட பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் ஓர்லி சர்வதேச விமான நிலையம் 126 வது இடத்தினை பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது குறித்த நேரத்தில் விமானங்களை இயக்குவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு அடுத்தபடியாக 121 ஆவது இடத்தில் சாள்-து-கோல் விமான நிலையம் உள்ளது. சரியான நேரம், தரம்,  உணவு வழங்கல் போன்ற காரணிகள் சாள்-து-கோலினை நூறுக்கு வெளியே தள்ளியுள்ளது. 

லியோன் நகரின் Saint-Exupéry விமான நிலையம் ஆச்சரியமாக 119 ஆவது இடத்தினை தக்கவைத்துள்ளது. இங்குள்ள Bordeaux-Mérignac நிலையம் 100  இடத்தினை பிடித்துள்ளது. 

இந்த தரவரிசையில், முதல் நூறு இடங்களுக்குள் வந்த ஒரே பிரெஞ்சு விமான நிலையம் Toulouse-Blagnac நிலையமாகும். இது 89 ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது. 

இவை அனைத்தும் தான் பிரான்சில் இருந்து இடம்பிடித்துள்ள விமான நிலையங்கள். 

ஓர்லி விமான நிலையம் 10 புள்ளிகளுக்கு 6.37 புள்ளிகள் பெற்று பிரான்சின் மிக விமானநிலையமாக தெரிவாகியுள்ளது.  

இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துக்கொண்ட விமான நிலையம் எது தெரியுமா? Doha International Airport Hamad Doha Qatar (டோகா ஹமட் சர்வதேச விமான நிலையம்) 8.39 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!