International
பிரான்ஸ்

உலகில் அதிகம் பேரால் பார்வையிடப்பட்ட லூவர் அருங்காட்சியகம்! – மீண்டும் முதலாவது இடத்தில்.!!

உலகில் அதிகம் பேரால் பார்வையிடப்பட்ட லூவர் அருங்காட்சியகம்! – மீண்டும் முதலாவது இடத்தில்.!!

பரிசின் அடையாளங்களில் ஒன்றான லூவர் அருங்காட்சியகம், உலக மக்களால் அதிகம் பார்வையிடப்பட்டு, உலகிலேயே முதலாவது அருங்காட்சியகமாக உள்ளது.

8.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 2017 ஆம் ஆண்டில் லூவர் அருங்காட்கியகம் கொண்டிருந்தது. அமெரிக்காவின் பிரபல கலாச்சார புள்ளிவிபரங்கள் நிறுவனமான T.E.A இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் வருகையை விட 9.5 வீதத்தால் 2017 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு நவம்பர் தாக்குதல் பரிசில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, 7.4 மில்லியன் பார்வையாளர்களை 201ஆம் ஆண்டில் சந்தித்து மூன்றாம் இடத்தில் இருந்த லூவர் அருங்காட்சியகம் இம்முறை (2017) 8.1 மில்லியன் பார்வையாளர்களை சந்தித்திருந்தது.

அருங்காட்சியகங்களில் இரண்டாவது இடத்தில் சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள தேசிய அருங்காட்சியகம் உள்ளது. அதன் பின்னர் வொஷிங்டனில் உள்ள விமான மற்றும் வானியல் அருங்காட்சியகம் உள்ளது. இருபதாவது இடத்தில் மீண்டும் பிரான்சை சேர்ந்த Le Centre Pompidou அருங்காட்சியகம் உள்ளது. 2017 ஆம் ஆண்டில் 3.3 மில்லியன் பார்வையாளர்களை சந்தித்திருந்த்து இந்த அருங்காட்சியகம்.

அதேவேளை, உலகில் உள்ள மிகச்சிறந்த மற்றும் அதிகம் பார்வையிடப்பட்ட தீம் பூங்காக்களில் பரிசில் உள்ள வோல்ட் டிஸ்னி பூங்கா 9.6 மில்லியன் பார்வையாளர்களுடன் 12 ஆவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!