International
பிரான்ஸ்

உலக்கிண்ண சாம்பியன்ஸ்! – எலிசே மாளிகையில் தொடரும் கொண்டாட்டம்!!

1998 அம் ஆண்டு இருந்த அதே உற்சாகம் தற்போது இரட்டிப்பாகியுள்ளது. இரண்டாவது தடவையாக உலகக்கிண்ணத்தை தன்வசமாக்கிய பிரெஞ்சு அணியை கெளரவிக்கும் முகமாக இன்று மாலை எலிசே மாளிகைக்கு அழைத்துள்ளார் மக்ரோன்.
நேற்று மோஸ்கோவுக்குச் சென்ற மக்ரோன், போட்டியின் முன்னரும், போட்டி முடிந்ததும் வீரர்களை சந்தித்தார். போட்டி முடிவில், ‘எங்கள் கனவை நிஜமாக்கிவிட்டீர்கள்!’ என மக்ரோன் வீரர்களிடம் தெரிவித்தார். போட்டியினை இரஷ்ய ஜனாதிபதி விளாதிமர் புத்தினுடன் இணைந்து பார்வையிட்ட மக்ரோன், போட்டி முடிந்ததும் மீண்டும் வீரர்களின் அறைக்குள் நுழைந்து, வீரர்களை கட்டியணைத்து வெற்றியை கொண்டாடினார். ‘இரண்டாவது நட்சத்திரத்தை எங்கள் நாட்டுக்கு கொண்டுவாருங்கள் என உங்களிடமும் உங்கள் பயிற்சிவிப்பாளரிடம் சொன்னேன். நீங்கள் அதை செய்துவிட்டீர்கள்!’
‘நீங்கள் 66 மில்லியன் மக்களின் கனவை நனவாக்கிவிட்டீர்கள். நாளை நீங்கள் நாட்டுக்குத் திரும்பும் போது அதை உணருவீர்கள்!’ என மக்ரோன் மிக உற்சாகமாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, வீரர்கள் இன்று மாலை ஜனாதிபதி மாளிக்கைக்கு வரவழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட உள்ளனர்.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!