International
பிரான்ஸ்

உள்துறை அமைச்சரை சிறையில் அடைக்கவேண்டும் – போராளிகள் முழக்கம்!!

நேற்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் 51,400 பேர் நாடு முழுவதும் கலந்துகொண்டன என உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பெரும் வன்முறை வெடித்ததோடு, பரிசில் நபர் ஒருவருக்கு நான்கு விரல்கள் வெட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், Toulouse மற்றும் Bordeaux நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியிருந்தது. <<எங்களுக்கு குறைந்த வரியும், நிறைந்த கொள்வனவு திறனும் (pouvoir d’achat) வேண்டும்>> என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதேவேளை, Lorient நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட மஞ்சள் மேலங்கி போராளிகள் <<மக்ரோன் பதவி விலகவேண்டும். உள்துறை அமைச்சரை சிறையில் அடைக்கவேண்டும்>> என முழக்கமிட்டனர்.

தவிர, கடந்த வியாழக்கிழமை வெளியான கருத்துக்கணிப்பின் படி, 64 வீத பிரெஞ்சு மக்கள் மஞ்சள் மேலங்கி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!