International
பிரான்ஸ்

‘ஐந்துவருடங்களில் Notre-Dame தேவாலயம் புனரமைக்கப்படும்! – ஜனாதிபதி மக்ரோன் உறுதி!!

‘அடுத்த ஐந்து வருடங்களில் Notre-Dame தேவாலயம், முன்னர் இருந்ததை விட அழகாக புனரமைக்கப்படும்!’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், எலிசே மாளிகையில் இருந்து ஆறு நிமிடங்களுக்கும் குறைவான சிறிய காணொளி பேட்டி ஒன்றில் தோன்றியிருந்தார். அதில் அவர் தெரிவிக்கும் போது, <<அடுத்த ஐந்து வருடங்களுக்குள் Notre-Dame இனை முன்னர் இருந்தனை விட உறுதியாகவும், அழகாகவும் புனரமைப்போம். அது எங்களால் முடியும். நாங்கள் புனரமைக்க நிறையவே உள்ளது>> என தெரிவித்தார்.

தவிர, தீயணைப்பு படையினர், காவல்துறையினர், பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவரும்  நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அதேவேளை, மஞ்சள் மேலங்கி போராட்டம் தொடர்பான மிகப்பெரும் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தயாராகி, இறுதி நிமிடத்தில் அது இரத்துச் செய்யப்பட்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே. விரைவில் விவாத நிகழ்வில் கலந்துகொள்வேன் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!