International
பிரான்ஸ்

ஒரே நாளில் Cergy-Pontoise leisure குளத்தில் குவிந்த 15,000 மக்கள்..!!

முன்னெப்போதும் இல்லாத அளவில், சிறிய குளம் ஒன்றில் ஒரே நாளில் 15,000 பேர் குவிந்துள்ளமை பெரும் பரபரப்பான செய்தியாகியுள்ளது. 

பரிசின் புறநகரான Cergy-Pontoise இல் உள்ள சிறிய குளத்தில், நேற்று சனிக்கிழமை 15,000 பேர் கூடினார்கள். பரிசில் நிலவிய அதிகூடிய வெப்பத்தினை சமாளிப்பதற்காக குளிப்பதற்கும், நீச்சலுக்காகவும் பலர் கூடினார்கள். இப்பகுதியில் நேற்றைய தினம் 36°c வெப்பம் நிலவியிருந்தது. இந்த குளத்துக்கு 15,000 பேர் ஒரே நாளில் கூடுவது இதுவரை நிகழ்ந்ததில்லை. இவர்களில் நேற்றைய தினம் மட்டும் 7,000 க்கும் அதிகமானோர் நீந்தினர். 

<<இந்த வெப்பத்தை போக்க இது சரியான இடம். நீர் குளிர்மையாக உள்ளது>> என பலர் குறிப்பிட்டனர். அதேவேளை நீச்சலில் ஈடுபடுவோர் மூழ்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. <<இது ஒரு குட்டி கடற்கரை போன்று இருந்தது>> எனவும் மக்கள் குறிப்பிட்டனர். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!