International
பிரான்ஸ்

ஓர்லி விமான நிலையத்துக்கு எதிராக 500 பேர் ஆர்ப்பாட்டம்!!

நேற்று சனிக்கிழமை, மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், ஓர்லி சர்வதேச விமான நிலையத்துக்கு எதிராக 500 பேர்கொண்டு அமைப்பு ஒன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

பெப்ரவரி 16 ஆம் திகதி, சனிக்கிழமை l’association de Défense Riverains Aéroport Paris Orly (Drapo) எனும் அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஓர்லி விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் வசிப்பதாக தங்களை பிரகடனப்படுத்தும் இவர்கள், ஓர்லி விமான நிலையத்தினால் தாம் இரவில் நிம்மதியாக உறங்க முடிவதில்லை என அவர்கள் தெரிவித்தனர். ஓர்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அல்லது வந்துசேரும் அதிக சத்தங்கள் கொண்ட விமான சேவைகளை நிறுத்தும் படி அவர்கள் கோரியுள்ளனர்.

<<எங்களுக்கு எட்டு மணிநேரம் அமைதியில் இருப்பதற்கு உரிமை உண்டு>> என அவர்கள் மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளனர். ‘குறைந்தது 23:30 இல் இருந்து காலை 6 மணி வரையிலாவது அமைதியாக இருந்தால் போதுமானது. ஆனால் அது எட்டுமணிநேரங்களுக்கும் குறைவுதான்!’ என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். அதேவேளை, கடந்த கோடை காலத்தின் போது, ஓர்லி விமான நிலையத்தினால் சுற்றுச்சூழல் மாசடைவு அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!