International
பிரான்ஸ்

கடத்தல் – வன்முறை – சித்திரவதை – வலை விரித்த காவற்துறை!!

கடந்த டிசம்பர் மாதம்22ம் திகதி, ஒரு நபர், ஆயுத முனையில் ஒரு குழுவினரால் தூர் (Tours) இலுள்ள Noyant-de-Touraine இல் வைத்து ஆயுத முனையில் கடத்தப்பட்டுள்ளார்.

அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட இவர், ஒரு வயற்பகுதியில் அடைத்து வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். கோடாரிப் பிடியால் தாக்கப்பட்ட இவர், துப்பாக்கி முனையிலும் அச்சுறுத்தப்பட்டுள்ளார். அங்கு சில் துப்பாக்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. நினைவிழந்த நிலையில் இவர் இரண்டு நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணைகளின் அடிப்படையில் இன்று Indre-et-Loire இல், மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் வீட்டிலிருந்து மிகவும் மோசமான கொக்கெய்ன், LSD போன்ற போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் மீது மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவர்கள் பல ஆயுத முனைக் கொள்ளைகள், மற்றும், திருட்டுக்களில் ஈடுபட்டமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, தூர் நகர அசரசட்டப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!