International
பிரான்ஸ்

கடற்கரையில் இருக்கும் கூட்டம் எவ்வளவு? – வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ள புதிய வசதி!!

கடற்கரையில் இருக்கும் கூட்டத்தின் அளவு குறித்து வீட்டில் இருந்தே அறிந்துகொள்ள புதிய செயலி ஒன்றை முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.

2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சில் இடம்பெற உள்ளதை அடுத்து, இந்த புதிய முயற்சியை Marseille நகரம் முன்னெடுத்துள்ளது. இங்குள்ள மூன்று பிரதான கடற்கரையில் ‘சென்சார்’ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பின்னர் இந்த கருவிகள், தகவலை நேரடியாக கடத்தி, திறன் பேசியில் உள்ள செயலி ஒன்றில் நேரடியாக தருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறே ‘கடற்கரையில் இருக்கும் கூட்டத்தினர்’ குறித்து அறிந்துகொள்ளலாம்.

இவ்வருட ஜுலை ஓகஸ்ட் மாதத்தில் மிக மோசமான ஜன நெருக்கடியை கடற்கரை சந்தித்ததாகவும் பலரை திருப்பி அனுப்பியதாகவும் அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும்  தெரிவிக்கபட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!