கடைகளில் வங்கி அட்டை மூலம் பணம் பெறலாம் Vous pourrez bientôt retirer de l’argent chez les commerçants
அவசரமாக கையில் சில்லறையாக பணம் இல்லாத சூழ்நிலையில் அருகில் உள்ள கடையில் சென்று வங்கி அட்டையை (la carte bleue) கொடுத்து பணம் பெறலாம். ஐரோப்பிய அளவில் இந்த சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. சில ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்த சட்டம் தேவையா என்ற கேள்வி எழுந்தாலும் பிரான்சில் மிக இலகுவாக வங்கிகள் பொறுத்தியுள்ள பணம் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் மூலமாக பணம் எடுக்கலாம். ஆனால் இந்த நிலை பல ஐரோப்பிய நாடுகளில் இல்லை. மிக குறைந்த தானியங்கி இயந்திரங்கள் (les distributeurs d’argent) தான் அந்த நாடுகளில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் கை செலவிற்கு பணம் தேவை படுபவர்கள் கடைகளில் சென்று தங்கள் வங்கி அட்டையை கொடுத்து அதிகபட்சமாக 80€ வரை பெற்றுக்கொள்ளலாம். விரைவில் இந்த சட்டம் பிரான்சிலும் நடைமுறை படுத்தப்படவுள்ளது.