International
பிரான்ஸ்

கார்-து-நோர் – குழந்தை பெற்றுக்கொண்ட ஆசியாவைச் சேர்ந்த பெண்!!

இன்று வெள்ளிக்கிழமை காலை பரிஸ் கார்-து-நோர் நிலையத்தில் ஆசியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

ஒரு தாதியார், RATP ஊழியர் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் இந்த பிரசவம் இடம்பெற்றுள்ளது. காலை 6.20 மணிக்கு, நிலையத்தில் உள்ள நகரும் படிக்கட்டுக்கு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடனடியாக பாதுகாப்பு கூடாரம் ஒன்று RATP ஊழியர்களால் அமைக்கப்பட்டது. ஆசியாவைச் சேர்ந்த குறித்த பெண் தனது தாயாருடன் வந்துள்ளார். இருவரும் பிரெஞ்சு பேசமுடியாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வட்டாரத்தில் உள்ள Robert Debré மருத்துவமனையில் இருந்து தாதியர் ஒருவர் வரவழைக்கப்பட்டார். பிரசவ வலியைத் தொடர்ந்து பெண் அழகான் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

சில நிமிடங்களின் பின்னர், Lariboisière மருத்துவமனைக்கு தாயும் சேயும் அனுப்பி வைக்கப்பட்டனர். கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!