International
பிரான்ஸ்

காலை வரை போராடிய தீயணைப்பு வீரர்கள் – ஒரு பார்வை – காணொளி

பரிஸ் நோத்ர-தாம் தேவாலயத்தைத் தீயிலிரந்து காப்பாற்றுவதற்காக காப்பாற்றுவதற்காகத், தீயணைப்புப் படை வீரர்கள் இன்று காலை வரை இடைவிடாது போராடி உள்ளனர். இதில் ஒரு தீயணைப்புப் படைவீரன் காயமடைந்தும் உள்ளார். இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையில் தேசியத் தீயணைப்புப் படைவீரர்களின் சம்மேளமான Fédération nationale des pompiers இன் வீரர்களும், பரிசின் தீயணைப்புப் படைப்பிரிவான  BSPP (Brigade de sapeurs-pompiers de Paris) இன் இராணுவவீரர்களும், நேற்று மாலை 19h00 மணியிலிருந்து, இன்று காலை 7h00 மணிவரை 12 மணிநேரமாகப் போராடி உள்ளனர். இந்த நடவடிக்கையில் போராடியவர்களில் 90 சதவீதமானவர்கள் இராணுவப் படைப்பிரிவின் தீயணைப்பு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு படைப்பரிவிலிருந்தும் 374 வீரர்கள் தீயுடன் போராடி உள்ளனர்.

இன்று காலை புதிய படையணி வந்ததன் பின்னரே, நேற்றிலிருந்து போராடியவர்கள் ஓய்வெடுத்துள்ளனர்.

‘நாங்கள் வந்தபோது தீ மிகவும் பெரிதாகப் பரிவியிருந்தது. தேவாலயம் தரைமட்டம் ஆகிவிடும் என்றே அச்சமடைந்தோம்’ என தீயணைப்புப் படைவீரர்களின் பேச்சாளர் Alexandre Jouassard தெரிவித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!