International
பிரான்ஸ்

காவல்துறையினரின் கைதின் போது காயமடைந்த இளைஞன்! – IGPN விசாரணை!!

செந்தனியில் இளைஞன் ஒருவனை கைது செய்யும் போது, கழுத்தில் பலத்த காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு IGPN அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கடந்த சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சென்-செந்தனியின் Vaujours நகரில், வீதி கண்காணிப்பில் BAC அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது இளைஞர்கள் குழு ஒன்றை சோதனையிட்டிருந்தனர். அப்போது சில அதிகாரிகள் கத்தரி கோல் ஒன்றுடன் தம்மை நெருங்கியதாகவும், 17 வயதுடைய இளைஞன் ஒருவனை கழுத்தில் தாக்கியதாகவும் குழுவில் இருந்த இளைஞன் ஒருவன் தெரிவித்துள்ளான். பின்னர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், கழுத்தில் மூன்று தையல் போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இளைஞனுக்கு அதிகளவில் இரத்தம் வெளியேறியதாகவும், அவனது உடை முழுவதும் இரத்தம் தோய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், காவல்துறையினருக்கான காவல்துறையினரான IGPN அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!