International
பிரான்ஸ்

காவல்துறை அதிகாரி மீது மோதிய வாகனம்! – துப்பாக்கிச்சூடு!!

தன் மீது மோதிவிட்டு தப்பி ஓடிய வாகனம் ஒன்றை நோக்கி காவல்துறை அதிகாரி ஒருவர் மூன்று தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். நேற்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று புதன்கிழமை காலை பத்து மணி அளவில், Villejuif  (Val-de-Marne) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதி கண்காணிப்பில் நின்றிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், சோதனை நடவடிக்கைகளுக்காக வீதியில் சென்ற வாகனம் ஒன்றை நிறுத்த பணித்துள்ளார். ஆனால் வாகனத்தின் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக பயணித்துள்ளான். இதனால் காவல்துறை அதிகாரி உந்துருளி மூலம் வாகனத்தை துரத்திச் சென்றுள்ளார். சில நிமிடங்களின் பின்னர் தப்பியோடிய வாகனம் நடுவழியில் நிறுத்தப்பட்டு, திடீரென பின்னால் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது காவல்துறை அதிகாரியை வாகனம் மூலம் மோதியுள்ளான்.

தொடர்ந்து, தனது துப்பாக்கியை வெளியே எடுத்த காவல்துறை அதிகாரி மூன்று தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இருப்பினும் வாகனத்துக்குள் இருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரி காயமடையவில்லை. IGPN அதிகாரிகள் இதுதொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!