International
பிரான்ஸ்

குடியிருப்பு ஒன்றில் இருந்து – ஒன்றரை வயதுடைய சிங்கக்குட்டி மீட்பு!!

Val-de-Marne இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒன்றரை வயதுடைய சிங்க குட்டி ஒன்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, Valenton பகுதியில் இருந்து நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். குறித்த நபர் தனத் வீட்டுக்குள் சிறிய சிங்க குட்டி ஒன்றை மறைத்து வைத்துள்ளார். இரண்டாம் தளத்தில் உள்ள வீட்டுக்குள் காவல்துறையினர் நுழைந்த போது அங்கு நபர் இருந்திருக்கவில்லை எனவும், அங்கிருந்து சிங்கக்குட்டி மீட்கபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கக்கிட்டியை மறைத்து வைத்திருந்த நபர் அதே கட்டிடத்தில் மறைந்திருந்ததாகவும், அவரை BAC அதிகாரிகள் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுள்ளது. குறித்த சிங்கக்குட்டி €10,000 க்களுக்கு விற்பனை செய்யபட உள்ளதாக அறிய முடிகிறது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!