International
பிரான்ஸ்

குடும்ப வன்முறை! – 30 வயதுடைய மகனை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை!!

குடும்ப சண்டை ஒன்றில், 30 வயதுடைய நபர் அவரின் தந்தையால் குத்திக்கொல்லப்பட்டுள்ளார். தந்தை கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு Saint-Gilles (Gard) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது காதலி மற்றும் தந்தை தாயுடன் இரவு உணவு சாப்பிடும் போது, எழுந்த தகறாரில் மகன் தந்தையின் கன்னத்தில் அறைந்ததாக அறியமுடிகிறது. அதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த தந்தை, மேசையில் இருந்த கத்தி ஒன்றினால் மகனை குத்தியுள்ளார். தொண்டைப்பகுதியில் கத்தியால் குத்தியதால் மகன் உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை 21:30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 22.30 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்திருந்த தீயணைப்பு படையினர் சடலத்தை மீட்டுள்ளனர். காவல்துறையினர் தந்தையை கைது செய்துள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!