International
பிரான்ஸ்

கை பிய்த்தெறியப்பட்ட மஞ்சளாடைப் போராளி!! (அவதானம் இரத்தம் வழியும் காட்சி) – காணொளி!

இன்றைய மஞ்சளாடைப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரின் கை பிய்த்தெறியப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் நடந்த போராட்டத்தில் வன்முறைகள் வெடித்திருந்த நிலையில் இவரது கை பிய்த்தெறியப்பட்டுள்ளது.

ஆனால் இவரறிற்கு வெறும் நான்கு விரல்கள் மட்டுமே அறுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த காவற்துறையினர், இவர் பாராளுமன்றத்திற்குள் நுழைய எத்தனித்தபோதே இந்தச் சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இவரது கை துண்டிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.

காவற்துறையினர் வீசிய கலவரமடக்கும் கைக்குண்டே இவரது கையைப் பிய்த்தெறிந்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டங்களில் மருத்தவசிகிச்சை மற்றும் முதலுதவிகளை வழங்கும் னுநள «street medic» என அழைக்கப்படும் மருத்துவக் குழு இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தி உள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!