International
பிரான்ஸ்

கோடை விடுமுறையின் முதல் வார இறுதி நாள்! – இல்-து-பிரான்சுக்குள் போக்குவரத்து நெரிசல்! – சிவப்பு எச்சரிக்கை!!

கோடை விடுமுறையின் முதல் வார இறுதி நாட்களான இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை இல்-து-பிரான்சுக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில் முதல் வார இறுதி நாட்கள் என்பதால் பிரான்சில் இருந்து வெளிச்செல்லும் வீதிகளில் நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என வீதி போக்குவரத்து கண்காணிப்பாளர்களான Bison அறிவித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை நாடு முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கையும், இல்-து-பிரான்சுக்குள் சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதேவேளை ஞாயிற்றுக்கிழமை Auvergne-Rhône-Alpes மகாணத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும், நாடு முழுவது பச்சை நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இன்று பெரு நகரங்களுக்கிடையே பயணிப்பவராயின் 15 மணியில் இருந்து 20 மணி வரை பயணத்தை தவிர்த்துக்கொள்ளும் படியும், இல்-து-பிரான்சுக்குள் இருந்து வெளியேறுபவராக இருந்தால் அதிகாலை 5 மணிக்குள் வெளியேறும் படியும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக A7 மற்றும் A9 வீதிகளில் அதிகளவான போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!