International
பிரான்ஸ்

சடலமாக மீட்கப்பட்ட Nantes அணி வீரர் – விமான விபத்தில் பலி!!

Nantes நகர அணியின் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரர் Emiliano Sala விமான விபத்தில் உயிரரிழந்துள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Emiliano Sala மற்றும் அவர் பயணித்த விமானத்தின் விமானியும் கடந்த ஜனவரி 21 ஆம் திகதி இரவு காணாமல் போயிருந்த நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய விசாரணைக்குழு அறிவித்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அதற்குரிய காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. விமானத்தில் பயணித்த Emiliano Sala மற்றும் விமானி David Ibbotson ஆகியோரின் சடலம், பிரித்தானியாவுக்குச் சொந்தமான Portland தீவில் இருந்து மீட்கப்பட்டது. அங்கேயே உடற்கூறு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து Nantes அணிக்காக விளையாடி வந்தவர் எனவும், தற்போது இங்கிலாந்தின் Cardiff அணிக்காக பெரும் தொகை ஒன்றுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்குகளுக்காக அவரது சடலம் Nantes நகருக்கு எடுத்துவரப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!