International
பிரான்ஸ்

சத்தலே! – திங்கள் முதல் மூடப்படும் 11 ஆம் இலக்கம் மெற்றோ!!

நாளை மறுநாள் திங்கட்கிழமையில் இருந்து சத்தலே நிலையத்தில் உள்ள பதினோராம் இலக்க மெற்றோ  மூடப்பட உள்ளது.

பதினோராம் இலக்க மெற்றோவின் கிழக்கு பகுதி விரிவாக்கலுக்காக இந்த Châtelet நிலையத்தின் இப்பகுதி மூடப்பட உள்ளது. மார்ச் 18, திங்கட்கிழமையில் இருந்து டிசம்பர் 16 ஆம் திகதி வரை இப்பகுதி மூடப்பட்டிருக்கும்.

சத்தலே நிலைத்தின் 11 ஆம் இலக்க மெற்றோ, நகரமண்டபத்தை இணைக்கும் மிக பரபரப்பான நிலையம் என்பதால், இதற்கான மாற்று ஏற்பாடுகளை RATP மேற்கொண்டுள்ளது. பயணிகளுக்கு தகவல்களை வழங்குவதற்காக மாத்திரம் ஐம்பது தூதுவர்கள் நிலையத்தில் பணியாற்றுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!