International
பிரான்ஸ்

சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்! – வழக்கு பதிவு!!

ஐந்து வயது சிறுவன் ஒருவன் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளதாக, சிறுவனின் தந்தை காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இச்சம்பவம் Ivry-sur-Seine (Val-de-Marne)  இல் இடம்பெற்றுள்ளது. ஐந்து வயது சிறுவன் ஒருவன் மீது பாலியல் ரீதியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அவனது தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த பெப்ரவரி 14, வியாழக்கிழமை இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஆரியமுடிவதாவது, குறித்த மாணவன் ஆசிரியரின் அனுமதி பெற்று பாடசாலையில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளான். அப்போது சமையல் வேலைகளை கவனித்துக்கொள்ளும் நபர் ஒருவர் சிறுவனிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு அந்நகர முதல்வர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிந்தி கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!