International
பிரான்ஸ்

சிறைச்சாலைக்குள் இருவரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்த நபர்!!

சிறைச்சாலைக்குள் கைதி ஒருவன் இரு நபர்களை பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு,  Alençon-Condé-sur-Sarthe , ( Orne) சிறைச்சாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு சிறைவைக்கபட்டுள்ள கைதி ஒருவன் 19:00 மணியளவில் இரு நபர்களை பணயக்கைதியாக பிடித்துள்ளான். நன்கு அனுபவம் கொண்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவரையும், இளம் சிறைக்கைதி ஒருவரையுமே அவன் பணயக்கைதியாக பிடித்துக்கொண்டான். 

பின்னர், 23:45 மணியளவில் அதிகாரியை விடுவித்துள்ளான். இரண்டாவது நபரை 00:30 மணிக்கு விடுவித்துள்ளான். இந்த சம்வத்துக்குரிய காரணம் குறித்து அறியமுடியவில்லை. பணயக்கைதிகளை பிடித்த கைதி, விசாரணைகளுக்காக Éris (Regional Response and Security Teams) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். 

அவன் முன்னதாகவே பல தடவைகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தவன் எனவும், சிறைச்சாலைக்குள் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கபட்டிருந்தான் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!