International
பிரான்ஸ்

சிறையில் இருந்து தப்பித்த கொள்ளையன்! – பின் தொடரும் காவல்துறையினர்! – ஆயுதங்கள் மீட்பு!!

பிரான்ஸ்சிறையில் இருந்து தப்பித்த கொள்ளையன்! – பின் தொடரும் காவல்துறையினர்!

சிறைச்சாலையில் இருந்து உலங்குவானூர்தி மூலம் தப்பிச் சென்ற கொள்ளையன் Redoine Faïd இனை காவல்துறையினர் தொடர்ச்சியாக பின் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொள்ளையனின் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oise நகரில் உள்ள கட்டுபகுதிக்குள், கொள்ளையனின் ஆடைகள் மற்றும் நீண்ட துப்பாக்கிகள் போன்றன கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்தி தான்  Réau சிறைச்சாலைக்குள் இறங்கிய ஆயுததாரிகள், அதிகாரிகளை சிறைப்படுத்தி, Redoine Faïd இனை அழைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

ஜூலை, 1 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொள்ளையன் இருக்குமிடம் இதுவரை தெளிவாக அறியமுடியவில்லை என்றபோதும், அவன் தப்பியோடிய இடங்களை தொடர்ந்தும் பின் தொடர்ந்து வருகின்றனர். காட்டுக்குள் இருந்து அவனது ஆடைகள் கண்டெடுக்கப்பட்டது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக உள்ளது எனவும், கொள்ளையன் சமீபத்தில் Verneuil-en-Halatte நகரை வந்திருந்துள்ளான் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!