International
பிரான்ஸ்

சிறையில் தாக்குதல் நடத்திய Michael Chiolo யார்??!

Orne மாவட்டத்தில் உள்ள Condé-sur-Sarthe சிறச்சாலை கைதியான Michael Chiolo, இரு அதிகாரிகள் மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டிருந்தான். இந்நிலையில், அது குறித்து மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன்.

27 வயதுடைய Michael Chioloக்கு 30 வருட சிறைத்தண்டனை வழங்கபட்டிருந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை இவர் செரமிக்கினால கத்தி ஒன்றின் மூலம் இரு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தார். அதன்போது அவன் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மனைவியுடன் சிறைச்சாலைக்குள் பதுங்கிக்கொண்ட  Michael Chiolo, ஒரு மணிநேரம் கழித்து துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டான். இந்த துப்பாக்கிச்சூட்டின் அவனது மனைவி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவன், முன்னால் தொடரூந்து ஊழியன் எனவும், சிறைக்குள் வைத்தே இஸ்லாம் மதத்தை தழுவிக்கொண்டான் எனவும் அறிய முடிகிறது. இவன் கடந்த 2010 ஆம் ஆண்டு சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தான். பின்னர் 2012 ஆம் ஆண்டில் Montigny-lès-Metz பகுதியில் வசித்த எண்பது வயதுகளையுடைய முதியவர் ஒருவரை தன் சகாக்களோடு சேர்ந்து தாக்கிய குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்நிலையிலேயே இந்த தாக்குதலை அவன் மேற்கொண்டுள்ளான். இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அவனது கைக்கு செரமிக்கிலான கத்தி கிடைத்தது எப்படி என்பது தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!