International
பிரான்ஸ்

சுற்றுக்காவல் அதிகாரிகளின் மகிழுந்தை எரிந்த இருவர்! – விசாரணையின் கீழ்!!

சனிக்கிழமை இடம்பெற்ற 13 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது, பரிசில் சுற்றுக்காவல் அதிகாரிகளிகளி மகிழுந்து எரிக்கப்பட்டது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 9 ஆம் திகதி சனிக்கிழமை, பாராளுமன்றத்துக்கு அருகே பெரும் கலவரம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து, Champ-de-Mars இல் மோதல்கள் தொடர்ந்தது. அப்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுக்காவல் அதிகாரிகளின் (l’opération Sentinelle) மகிழுந்து ஒன்றை சில நபர்கள் எரியூட்டினர். மகிழுந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இரண்டாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த நபர் 30 வயதுடையவர் எனவும், காவல்துறையினரால் நன்கு அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!