International
பிரான்ஸ்

செப்டம்பர் 1 – எரிவாயு விலைமாற்றம்! – குமிழ் விளக்குகள், தொலைபேசிகள் தடை!!

இன்று செப்டம்பர் 1 ஆம் திகதி, பிரான்சில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயுவில் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சமையலுக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவில் 0.3 வீத விலை அதிகரிப்பும், சமையல் மற்றும் வெந்நீருக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவில் 0.5 வீத விலையேற்றமும், வெப்பத்துக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவில் 0.9 வீத விலையேற்றமும் கண்டுள்ளது. இன்று சொடம்பர் 1 ஆம் திகதி முதல் இந்த விலை மாற்றம் நடைமுறைக்கு வரும். கடந்த ஜூலை மாதம் மிகப்பெரிய அளவில் எரிவாயு விலையேற்றம் கண்டிருந்தது. தவிர ஓகஸ்ட் மாத ஆரம்பத்திலும் 0.2 எனும் சிறிய அளவிலும் விலை மாற்றம் கண்டிருந்தமை குறிபிடத்தக்கது.

அதேவேளை, Halogen bulbs என அழைக்கப்படும் குமிழ் விளக்குகள் விற்பனையும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. அதிக மின்சாரத்தை இந்த குமிழ் விளக்குகள் எடுத்துக்கொள்ளுவதுடன்,  அதிகளவான சுற்றுச்சூழல் வெப்பத்தையும் வெளியிடுகிறது என தெரிவிக்கப்பட்டு இன்று முதல் விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3 ஆம் திகதி, திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கின்றன. இன்று முதல் பாடசாலைகளில் தொலைபேசிகள் பயன்படுத்துவது தடைவிதிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை 12 மில்லியன் சிறார்கள் பாடசாலை திரும்புகின்றனர். முன்னர் அரசு அறிவித்தது போல், பாடசாலையில் மாணவர்கள் திறன்பேசிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!