International
பிரான்ஸ்

சோம்ப்ஸ்-எலிசேயில் சூறையாடப்பட்ட கடைகள்!!

பரிசில் உள்ள பல்வேறு கடைகள் நிறுவனங்கள் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் உடைக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் இருந்தது.

காலை இடம்பெற்ற வன்முறையில் Le Fouquet’s உணவகம் உடைக்கப்பட்டது. பின்னர் மாலை 17:00 மணிக்கு மீண்டும் அதே உணவகம் முன்னால் கூடிய போராளிகள், இம்முறை கடைக்கு தீ மூட்டப்பட்டியிருந்தனர். காவல்துறையினர் கண்ணீர்புகை வீசி அவர்களை கலைத்திருந்தனர்.

அதேவேளை, ஆடம்பர ஆடைகள் விற்பனை செய்யும் கடைகளான Zara, Lacoste, Celio போன்ற கடைகளும் சூறையாடப்பட்டன. PSG காட்சியறையும் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தன.

பின்னர் சில நிமிடங்களில் Swarovski காட்சியறை உடைக்கப்பட்டது. பின்னர் அருகில் அமைந்துள்ள Hugo Boss, Nespresso கடைகளுக்கும் இந்த சேதம் ஏற்பட்டது.

பத்திரிகை கடைகள், உணவகங்கள், கதிரை மேசைகள், குப்பைத்தொட்டிகள், வாகனங்கள், உந்துருளிகள் என கண்ணில் சிக்கியவை எல்லாவற்றையும் அடித்து நொருக்கியதோடு தீ மூட்டியும் பலத்த வன்முறையில் ஈடுபட்டனர்.

பிரதமர் எத்துவா பிலிப், <<ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை>> என கண்டனம் வெளியிட்டுள்ளார். அதேவேளை, உள்துறை அமைச்சர் Christophe Castaner, <<மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளும் வேலை இது>> என கடும் வார்த்தைகளால் இதை விமர்சித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!