International
பிரான்ஸ்

ஜனாதிபதிக்கு நடு விரலை காண்பித்த நபர் கைது!!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை அசிங்கப்படுத்தும் நோக்கில் அவரை நோக்கி நடுவிரலை காண்பித்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

Burkina Faso இல் பயங்கரவாதிகளுடன் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த இரு இராணுவ வீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு நேற்றைய தினம் Invalides இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வுகளை முடித்துக்கொண்டு எலிசே திரும்புவதற்காக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், avenue Gallieni வீதியால் அவரது வாகனம் பயணித்துள்ளது. அதன்போது நபர் ஒருவர் ஜனாதிபதியை நோக்கி தனது நடுவிரை காண்பித்து அவமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரானைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதன்போது அவர் ஒரு மஞ்சள் மேலங்கி போராளி என தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் மீது எந்த வழக்குகளும் பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!