International
பிரான்ஸ்

ஜனாதிபதி மற்றும் நகர முதல்வர் இரங்கல்! – தீயணைப்பு படையினருக்கு நன்றி!!

பத்து பேர்வரை பலியாக காரணமாக இருந்த மிக மோசமான தீ விபத்தில், களத்தில் போராடி தீயை அணைத்த வீரர்களுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நன்றி தெரிவித்துள்ளார்.

<<நேற்று காலை விடியும் போதே சோகமாக விடிந்துள்ளது. rue Erlanger இல் ஏற்பட்ட தீயில் உயிரிழந்தவர்களை நினைவு கோருகிறேன். பல உயிர்களை சிரமத்துக்கு மத்தியில் காப்பாற்றிய தீயணைப்பு படை வீரர்களுக்கு எனது நன்றிகள்!>> என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேவேகளை, காலை சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, சம்பவத்தினை நேரில் பார்வையிட்டார்.  உயிரந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், அவர்களின் உறவினர்களுக்கு இரங்கல்களையும் தெரிவித்தார்.

பின்னர், பரிஸ் 16 ஆம் வட்டார நகர மண்டபத்தில் மனநல சிகிச்சை மையம் ஒன்றை அமைத்துள்ளததாக தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!