International
பிரான்ஸ்

ஜன்னலுக்கால் துப்பாக்கிச்சூடு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் கைது! – சுற்றிவளைத்த காவல்துறையினர்!!

நேற்று சனிக்கிழமை காலை, 64 வயதுடைய நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலைத் திறந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Merignac (Roger-Salengro) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது தளத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து காலை 7 மணி அளவில் ஜன்னலுக்கால் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனால் பதட்டமடைந்த அக்கம்பக்கத்தினர், காவல்துறையினருக்கு தொடர்பு கொண்டு வரவழைத்தனர். வீட்டுக்குள் அறையை பூட்டிக்கொண்டு 64 வயதுடைய நபர் ஒருவர் ரைஃபிள் வகை துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு இருந்துள்ளார்.

ஆனால், அதற்குள்ளாக மேலதிகமாக வரவழைக்கப்பட்ட காவல்துறையினர் வீட்டினை சுற்று வளைத்து வாகனங்கள் அப்பகுதிக்குள் உள்நுழையவும் தடை விதித்தனர். அடுக்குமாடியில் குடியிருந்தவர்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கட்டளையிடப்பட்டது. பின்னர் மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!