International
பிரான்ஸ்

ஜூலை 14 : அறிமுகமாகும் அதி நவீன தொழில்நுட்ப கருவிகள்..!!

இன்று ஜூலை 14 ஆம் திகதி, சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற உள்ள இராணுவ அணிவகுப்பின் போது, அதி நவீன இராணுவ தொழில்நுட்ப இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 

Le Griffon :

வழக்கமான VAB வகை ‘டாங்கி’ வாகனம் போன்று இல்லாது, பல புதிய வசதிகளை கொண்ட புதிய VBMR வகை டாங்கி வாகனம் இது. இதில் தானியங்கி முறையில் கிரானைட் குண்டுகளை வீசவைக்க முடியும் எனவும், ஒரே சமயத்தில் அனைத்து பகுதிகளிலும் இயந்திர துப்பாக்கியை ஒரு இடத்தில் இருந்து இயக்கவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வாகனத்துக்கும் சாரதி ஒருவரும், இயக்குனர் ஒருவரும் என இருவர் மாத்திரமே போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 Black Hornet 3

இது வெறுமனே 33 கிராம் எடையுள்ள ஒரு ட்ரோன் கருவி. ஒரு சிறிய சத்தம் கூட எழுப்பாத இது, ஒரு நொடிக்கு ஐந்து மீற்றர்கள் எனும் வேகத்தில் பறக்கும்.  உயர் தரத்திலான கமரா மூலம் நேரடி காணொளியை வீரர்களிடம் உள்ள திரைக்கு அனுப்பிக்கொண்டிருக்கும். இதனால் யுத்தக்களத்தில் எதிரிகளை கண்காணிக்க உதவியாக இருக்கும். இதன் மொத்த நீளம் 16 செ.மீற்றர். 

Stamina

ISL Saint Louis நிறுவனம் தயாரித்த இது ஒரு ரோபோ இயந்திரம். கண்காணிப்பு கமராவான இது, முதன் முதலாக GPS இல்லாமல் தன் பயணத்தை தொடரக்கூடியது எனவும், மிக நீண்ட தொலைவில் இருக்கும் அதன் திரைக்கு காணொளிளை அனுப்பக்கூடிய திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Le robot mule Barakuda

இது, தீர்மாணிக்கப்பட்ட இரண்டு பகுதிகளுக்கு இடையே துரிதமாக பயணிக்க கூடிய ஒரு காப்பான். காயமடைந்த வீரர்களை தூக்கி இதில் வைத்துவிட்டு, யுத்தத்தை தொடரவேண்டியது தான். இந்த இயந்திரம் அவர்களை தானியங்கி முறையில் அதன் முகாமுக்கு கொண்டுவந்து சேர்த்துவிடும்.  மணல் திட்டு, சதுப்பு நிலம் என எந்த வையையும் சமாளிக்கும் திறன் கொண்டதாகவும், எவ்வித ஒலியினையும் இது எழுப்பாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 -12 மணிநேரங்கள் தொடர்ச்சியாக இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நவீன கருவிகள் அனைத்தும் இன்றைய இராணுவ அணிவகுப்பின் போது அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!