International
பிரான்ஸ்

ஜூலை 14 நிகழ்வு! – ஈஃபிள் கோபுரத்தில் வானவேடிக்கை! – இசை நிகழ்ச்சி!!

ஜூலை 14 தேசிய நாள் நிகழ்வுகள் பரிசின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வரப்படுகின்றன.
மிகவும் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுர வானவேடிக்கை நிகழ்வு இம்முறையும் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14 சனிக்கிழமை இரவு 11 மணிக்கு வானவேடிக்கைகள் ஈஃபிள் கோபுரத்தில் இடம்பெறும். தவிர இசை நிகழ்வுகளும் இடம்பெற உள்ளது. Champ-de-Mars இல்  l’Orchestre National de France இன் இசை நிகழ்வுகளும் மிக பிரம்மாண்டமாய் இடம்பெற உள்ளது.
9.15 மணிக்கு ஆரம்பிக்கும் இசை நிகழ்வு 11 மணி அளவில் நிறைவுக்கு வர, அதைத் தொடர்ந்து வானவேடிக்கைகள் இடம்பெறும் என ஈஃபிள் கோபுர நிர்வாகிகள் (SETE) தெரிவித்துள்ளனர்.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!