International
பிரான்ஸ்

ஜோந்தாமினரிடம் இருந்து தப்பிக்க ஆறு மீற்றர் உயரத்தில் இருந்து பாய்ந்த திருடன்!!

திருடன் ஒருவன் ஜோந்தாமினர்களிடம் இருந்து தப்பிக்க, ஆறு மீற்றர் உயரத்தில் இருந்த் குதித்து பாய்ந்துள்ளான். 

இச்சம்பவம் சனிக்கிழமை Valencia நகரில் இடம்பெற்றுள்ளது. முதல் நாள் வெள்ளிக்கிழமை திருடன் ஒருவனையும், அவனுடன் சேர்த்து மேலும் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையின் போது, குறித்த திருடனுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் முன்னர் மருத்துவமனைக்கு திருடனை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு உட்படுத்தினர். 

ஆனால், மறுநாள் சனிக்கிழமை மருத்துவமனையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்த திருடன், மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளான். இதற்காக மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடி வழியாக 6 மீற்றர் உயரத்தில் இருந்து வெளியே பாய்ந்து தப்பிச் சென்றுள்ளான். குறித்த திருடனை மீண்டும் ஜோந்தாமினர் தேடி வருகின்றனர். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!