International
பிரான்ஸ்

ட்ரம்ப்- மக்ரோன் : சந்திப்பு!!

இன்று ஜூன் 6 ஆம் திகதி, Normandy தரையிறக்கத்தின் 75 ஆவது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிகள் சந்தித்துக்கொண்டனர். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப் இந்த நிகழ்வுக்கு அழைக்கபட்டிருந்ததை அடுத்து, மனைவி மெலேனியா ட்ரம்புடன் இன்று வருகை தந்திருந்தார். இந்நிலையில், இருவரும் சில நிமிடங்கள் சந்தித்து உரையாடினர். டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கும் போது, <<பிரான்சுடனான நட்பு, விதிவிலக்கானது. Normandy நிகழ்வானது வரலாற்றில் மிகச் சிறப்பான இடத்தை தக்கவைத்துள்ளது. பிரான்சுக்கும் அமெரிக்காவுக்குமான வரலாற்று சிறப்புமிக்க நட்புறவை எடுத்துக்காட்டுகின்றது!>> என டொனால்ட் ட்ரம்ப் மக்ரோனிடம் குறிப்பிட்டார். 

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கும் போது,  <<ட்ரம்ப் பிரான்சுக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சிக்குரிய விடயம். நன் மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாகின்றேன்!>> என அவர் குறிப்பிட்டார். 

இருவருக்குமான சந்திப்பு préfecture de Caen அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்புக்கு பின்னர் இரு நாட்டு ஜனாதிபதிகளும் தம்பதிகளாக மதிய விருந்துபசாரத்தில் கலந்துகொண்டனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!